வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா திருப்பனந்தாள் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வழிப்பறியில் ஈடுபடுபவர்களை கைது செய்வதற்காக இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையிலான குழு அமைத்து அதிரடியாக உத்தரவிட்டார்.
அந்த உத்தரவின்படி காவல்துறையினர் நடத்திய விசாரணையில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்தது சதீஷ்குமார், ராஜேஷ், சுதாகர், மணிகண்டன் ஆகியோர் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் 4 பேரையும் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.