Categories
மாவட்ட செய்திகள்

தொடர்ந்து நடைபெற்ற குற்றங்கள்… பாய்ந்த குண்டர் சட்டம்…. மாநகர போலீஸ் அதிரடி நடவடிக்கை…!!

திருச்சி மாவட்டத்தில் குற்ற சம்பவங்கள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் மாநகர் போலீஸ் பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி கத்தியை காட்டி வழிப்பறி செய்த மிட்டாய் பாபு, விஜயகுமார் மற்றும் தக்காளி முபரக் ஆகியோரை கைது செய்யப்பட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து கொலை முயற்சியில்  ஈடுபட்ட சுரேஷ் மற்றும் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் தினேஷ்குமார் என்பவரை கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் மீது மாநகர போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளது. இவர்கள் தொடர்ந்து குற்ற சம்பவங்களில் ஈடுபட கூடாது என்பதற்காக அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீசார் பரிந்துரை செய்தனர். அதன்படி 6 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து மாநகர கமிஷனர் ஜி. கார்த்திகேயன் உத்தரவிட்டார். இதற்கான ஆணை திருச்சி மத்திய சிறையில் உள்ள ஆறு பேருக்கும் வழங்கப்பட்டது.

Categories

Tech |