தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட 2 பேரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள புதூர் பகுதியில் இருக்கும் வீடு, மற்றும் கடைகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்குமாறு போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இதனால் தனிப்படை காவல்துறையினர் திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை தீவிரமாக தேடி வந்துள்ளனர்.
இந்நிலையில் காளையார் கோவிலை சேர்ந்த காளிராஜன் மற்றும் கார்த்திக் குமார் ஆகிய 2 பேரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்த 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள நகைகள் மற்றும் 4 லட்ச ரூபாய் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.