இங்கிலாந்தில் தொடர்ந்து மூன்றாவது நாளாக நடைபெற்றுவரும் போராட்டத்தில் 10 பேர் கைதாகி உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இங்கிலாந்தில் காவல்துறையினருக்கு அளிக்கப்பட்ட புதிய மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள் சாலையில் ஒன்று கூடி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தொடர்ந்து மூன்றாவது நாளாக நீடிக்கும் இந்த போராட்டத்தில் “அதே மசோதாவை கொள்ளுங்கள்” என்று கோஷங்களை எழுப்பி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இந்த போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் யாரும் கொரோனா விதிமுறைகளை கடைப் பிடிக்கவில்லை என்று தெரியவந்துள்ளது.
இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை கலைப்பதற்காக காவல்துறையினர் பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்துள்ளனர். இதனால் காவல்துறையினருக்கும், பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிலர் கற்களையும், கண்ணாடி பாட்டில்களையும் எடுத்து காவல்துறையினரை தாக்கியுள்ளனர்.
இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிலரை காவல்துறையினர் வன்முறையில் ஈடுபட்டதாகவும், அவசரகால பாதுகாப்பு அதிகாரியை தாக்கியதாகவும், கிளாஸ் – எ என்ற போதைப்பொருள் வைத்திருந்ததாகவும் கூறி கைது செய்துள்ளனர். அந்த வகையில் இதுவரை 10 பேரை கைது செய்துள்ளதாக மார்க் ருணகிரேஸ் என்ற காவல் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.