Categories
உலக செய்திகள்

“தொடர்ந்து பல்வேறு சட்ட சிக்கல்களை சந்திக்க நேரிடும் ட்ரம்ப்”… நேரில் ஆஜராக விசாரணை குழு சம்மன்…!!!!!!

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டெனால்டு டிரம்ப் நேரில்  ஆஜராகுமாறு விசாரணை குழு சம்மன் ஒன்று அனுப்பி இருக்கிறது. அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்ப் தான் அதிபர் தேர்தலில் தோல்வியுற்றதை ஏற்க மறுத்தது மட்டுமல்லாமல் வன்முறையை தூண்டி விட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் அமெரிக்காவின் வெள்ளை மாளிகை முன்பு கடந்த ஜனவரி 6-ம் தேதி வன்முறை வெடித்துள்ளது இதில் எட்டு பேர் உயிரிழந்தது தொடர்பாக வழக்கு விசாரணை செய்ய தனி குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த தனி குழு தற்போது விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு ட்ரம்பிற்கு சம்மன் அனுப்பி இருக்கிறது. இந்த நிலையில் இதனை எதிர்த்து டிரம்ப் தரப்பு மேல்முறையீடு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஆனால் ட்ரம்ப் நேரில் ஆஜராக மறுக்கும் பட்சத்தில் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தி, நீதி துறையின் மூலமாக அவருக்கு ஒரு வருடம் வரை சிறை தண்டனை வழங்கவும் முடியும் என்ற காரணத்தினால் தொடர்ந்து பல்வேறு சட்ட சிக்கல்களை ட்ரம்ப் சந்திக்க நேரிடுவார் என கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |