இந்தோனேஷியாவில் மில்லியன் மக்களில் ஒருவருக்கு வரக்கூடிய மிக அரியவகை நோயான Kleine-Levinஆல் பாதிக்கப்பட்ட சிறுமி தொடர்ந்து தூங்கிக்கொண்டேயிருக்கிறாராம்.
இந்தோனேஷியாவில் உள்ள Banjarmasin என்ற பகுதியில் வசிக்கும் Siti Raisa Miranda(17). இச்சிறுமி 2017 ஆம் வருடத்தில் தூங்கிக்கொண்டு இருந்தபோது சுமார் பதிமூன்று நாட்கள் தொடர்ந்து தூங்கியுள்ளார்.
இதனால் பதறிப்போன அவரின் பெற்றோர் மருத்துவரை அணுகியுள்ளனர். சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், Kleine-Levin என்ற நோய்க்கான அறிகுறி என்றும், இது சுமார் ஒரு மில்லியன் நபர்களில் ஒருவருக்கு வரக்கூடிய மிகவும் அரிதான நோய் என்றும் கண்டறிந்துள்ளனர்.
இதற்கு தொடர்ச்சியாக சிகிச்சை மேற்கொண்டு வந்த போதிலும் பலனளிக்கவில்லை. இவ்வாறு தொடர்ந்து சிறுமி தூங்கிக் கொண்டிருக்க, அவரது பெற்றோர் பதறிக்கொண்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பத்து நாட்கள் அனுமதித்து, மீண்டும் வீடு திரும்புகின்றனர். இதனால் மிகவும் பாதிப்படைந்த சிறுமியின் பெற்றோர் கூறியுள்ளதாவது, அவள் தூங்கும் போது நன்றாக தான் இருக்கிறாரா? என்பதை எங்களால் உறுதிபடுத்த முடியவில்லை.
எனவேதான் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறோம். இவ்வாறு அவர் தொடர்ந்து தூங்கிக் கொண்டே இருக்கும்போது நாங்கள் மிகுந்த மன உளைச்சல் அடைகிறோம். ஆனால் அவளை பரிசோதித்து பார்க்கும் போது நன்றாக இருப்பதாகவே மருத்துவர்கள் கூறுகின்றனர். எனினும் தூக்கம் தான் எங்களை வேதனையடையச் செய்கிறது என்று கூறுகின்றனர். இந்த நோய்க்கான குறிப்பிட்ட எந்த சிகிச்சை முறையும் தற்போதுவரை கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.