Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தொடர்ந்து பெய்து வரும் மழை…. சாலையில் வெள்ளம் போல் ஓடும் தண்ணீர்….!!!

தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக சாலைகளில் தண்ணீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் சாலையின் பல பகுதிகளில் தண்ணீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. இங்கு அதிகபட்சமாக நாகர்கோவிலில் 36 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. ‌ இதனையடுத்து பூதப்பாண்டியில் 12.4 மில்லி மீட்டர் மழையும், குழித்துறையில் 25.6 மில்லி மீட்டர் மழையும், மயிலாடியில் 12.2 மில்லி மீட்டர் மழையும், புத்தன் அணையில் 21.8 மில்லி மீட்டர் மழையும், சுருளகோடு பகுதியில் 28 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

அதன்பிறகு தக்கலையில் 2.4 மில்லி மீட்டர் மழையும், குளச்சல் பகுதியில் 12 மில்லி லிட்டர் மழையும், இரணியலில் 27 மில்லி மீட்டர் மழையும், ஆரல்வாய்மொழியில் 3 மில்லி மீட்டர் மழையும், பாலமோர் பகுதியில் 12.2 மில்லி மீட்டர் மழையும், கோழிப்போர்விளை பகுதியில் 5 மில்லி மீட்டர் மழையும், அடையார்மடை பகுதியில் 4 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. மேலும் பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 271 கன அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு 71 கன அடி தண்ணீரும், சிற்றார் 1 அணைக்கு 34 கன அடி தண்ணீரும், சிற்றார் 2 அணைக்கு 53 கன அடி தண்ணீரும் வருகிறது.

Categories

Tech |