Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தொடர்ந்து பெய்த மழை…. முறிந்து விழுந்த மரம்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…!!

சாலையில் விழுந்த மரத்தை தீயணைப்பு வீரர்கள் வெட்டி அப்புறப்படுத்தியுள்ளனர்.

நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையோரம் இருக்கும் மரம் முறிந்து விழுந்து விட்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முறிந்து விழுந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தியுள்ளனர். இதனையடுத்து ஒரு மணி நேரம் கழித்து அப்பகுதியில் போக்குவரத்து சீரானது.

Categories

Tech |