ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு எரி நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள நாகநல்லூர் ஊராட்சியில் 164 ஏக்கர் பரப்பளவு உடைய ஏரி அமைந்துள்ளது. இந்நிலையில் நாகநல்லூர் ஊராட்சியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு நாகநல்லூர் ஏரி நிரம்பி வழிகிறது. சுமார் 7 வருடங்களுக்கு பிறகு ஏரி நிரம்பியதால் விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர்.