தொடர் மழையால் முல்லை பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பொதுமக்களுக்கு ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள முல்லை பெரியாற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் உத்தமபாளையம் உதவி சூப்பிரண்டு அதிகரி ஸ்ரேயா குப்தா தலைமையில் கூடலூர் இன்ஸ்பெக்டர் முத்துமணி மற்றும் காவல்துறையினர் முல்லை பெரியாறு, குருவனற்று ஆற்றுபாலம் ஆகிய பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டுள்ளனர்.
இதனையடுத்து ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டதால் பொதுமக்கள் யாரும் ஆற்றில் குளிக்கக்கூடாது எனவும், துணி துவைக்ககூடாது எனவும் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் தடையை மீறி ஆற்றில் குளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.