கேரளா மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சியின் இடையே கடும் போட்டி நிலவி வருகின்றது. கம்யூனிஸ்ட் கட்சி 89 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 46 தொகுதிகளிலும், பாஜக 4 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றது.
தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று முடிந்தது கடந்த மார்ச் 27ம் தேதி முதல் தேர்தல் தொடங்கியது. கேரளாவில் 140 சட்டசபை தொகுதிகளிலும், ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதையடுத்து அசாமில் 126 தொகுதிகளில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று முடிந்தது. புதுச்சேரி மாநிலத்தில் 30 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்தது. மேற்குவங்கத்தில் 294 தொகுதிகளில் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று முடிந்தது.
இந்நிலையில் கேரளா மாநிலத்தில் 140 சட்டசபைத் தொகுதிகளிலும் ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்ற தேர்தலில் பல கட்சிகள் போட்டியிட்டன. இதில் சென்ற முறை ஆட்சி அமைத்த கம்யூனிஸ்ட் கட்சி 89 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றது. இதைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சி 46 தொகுதிகளிலும், பாஜக 4 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றது. கடந்த தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி 91 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது குறிப்பிடத்தக்கது.