அடுத்து வரும் அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகளில் வகுப்புகள் நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை தொடர்ந்து, தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை படிப்படியாக அளித்து வந்தது. இதன்படி பள்ளிகள், கல்வி நிலையங்கள் திறக்கப்பட்டன. இதற்கிடையில் தீபாவளி விடுமுறை மற்றும் தொடர் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டன.
இந்தநிலையில் விடுமுறை நாட்களை ஈடுகட்டும் வகையில் அடுத்து வரும் அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் செயல்படும் என்று தமிழக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, முதன்மை கல்வி அலுவலர்கள் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.