தமிழகம், மேற்கு வங்கம், கேரளம், புதுச்சேரி, அஸ்ஸாம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. அதற்கான தேதியையும் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. மேலும் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். பாஜகவினரும் காங்கிரஸ் கட்சியினரும் ஒருவரை ஒருவர் குறை கூறிக்கொண்டு விமர்சனம் செய்து வருகின்றனர். பாஜக எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று முனைப்பு காட்டுகிறது.
இந்நிலையில் வரும் 11ஆம் தேதியன்று நந்தி கிராமத்தில் சண்டி பூஜையும், சிவராத்திரி விழாவும் நடத்துவதாக மம்தா அறிவித்திருக்கிறார். மேலும் நந்திகிராமம் தொகுதியின் மேம்பாட்டிற்காக தன்னை விட இங்கு வந்து யாரால் போராட முடியும் என்று கூறிய அவர், தேர்தல் பரப்புரை மேடையில் தொடர்ந்து பத்து நிமிடங்கள் சமஸ்கிருத ஸ்லோகங்களை கூறி துர்கா பூஜை நடத்தி இருக்கிறார். மேலும் 26 முறை நமஸ்தஸ்ய என மம்தா மந்திர ஒலி எழுப்பி உள்ளார். அப்போது திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக குரல் கொடுத்துள்ளனர்.