Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தொடர்ந்து 7-வது ஆண்டாக சாதனை…. சிங்கம்புணரி அரசு பள்ளி மாணவிகளுக்கு குவியும் பாராட்டுகள்…!!!!

சிவகங்கை மாவட்டத்திலுள்ள திருப்புவனத்தில் மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்றுள்ளது. இதில் 25 பள்ளிகளைச் சேர்ந்த மாணவிகள் கலந்து கொண்டனர். இந்நிலையில் சிங்கம்புணரி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியை சேர்ந்த 35 மாணவிகள் போட்டியில் பங்கேற்றனர். இதில் மாணவிகள் 23 தங்கம், 10 வெள்ளி, 2 வெண்கல பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

இந்த பள்ளி மாணவிகள் மாவட்ட அளவில் தொடர்ந்து 7-வது வருடமாக முதலிடம் பிடித்து வருவது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் மாணவிகள் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ளவும் தகுதி பெற்றனர். இந்த மாணவிகளை பள்ளியின் தலைமை ஆசிரியை கலாநிதி சக்திவேல், உடற்கல்வி ஆசிரியர் சேவுகரத்தினம், மகேஸ்வரி மற்றும் பிற ஆசிரியர்கள் பாராட்டியுள்ளனர்.

Categories

Tech |