காஞ்சிபுரம் மாவட்டத்தில் அறுந்து கிடந்த உயர்மின் அழுத்த மின் கம்பியை சரி செய்தபோது மின்சாரம் தாக்கி 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தமிழகத்தில் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் பெரும் அவதிப்பட்டு வருகிறார்கள். அது மட்டுமன்றி மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. இதனையடுத்து காஞ்சிபுரம் மாவட்டம் ஈஞ்சம்பாக்கம் பகுதியில் தொடர் மழை மற்றும் பலத்த காற்றால் பல்வேறு மின் கம்பங்கள் சாய்ந்து பிறந்துள்ளன. அப்போது அறுந்து கிடந்த உயர்மின் அழுத்த கம்பியை சரி செய்வதற்கு மின்வாரிய ஊழியர் பாக்கியநாதன் என்பவர் சென்றுள்ளார்.
அவர் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது திடீரென மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அவருக்கு உதவ சென்ற தயாளன் என்பவரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மழைக்காலம் என்பதால் மக்கள் மின் கம்பம் அருகே செல்ல வேண்டாம். வெளியே செல்லும் போது மிக எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.