Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தொடர் கனமழையால் அணையின் நீர்மட்டம் 98 அடியாக உயர்வு…. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை….!!!

தொடர் மழையின் காரணமாக அணையின் நீர்மட்டம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

தமிழகத்தில் பல மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழையானது தீவிரமடைந்ததோடு, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் மழை பெய்து வருவதால் பல்வேறு அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. அந்த வகையில் தற்போது ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இந்த அணையின் நீர்மட்டம் தற்போது 98 அடியாக இருக்கிறது. இந்நிலையில் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டும் என்பதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனையடுத்து அணைக்கு வினாடிக்கு 6182 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதால், நீர் மட்டத்தை தொடர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

Categories

Tech |