தமிழகத்தில் தொடர் மழை காரணமாக கடந்த வாரம் முழுவதும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இந்த வாரமும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பள்ளி கல்லூரிகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்து வருகின்றனர். அதன்படி தொடர் கனமழை காரணமாக இன்று செங்கல்பட்டு, கடலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைப் போல விழுப்புரம், திருப்பத்தூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
Categories