Categories
உலக செய்திகள்

தொடர் கனமழை…. திடீரென ஏற்பட்ட நிலச்சரிவு…. 11 பேர் பலி….!!

கனமழையினால் ஏற்பட்ட நிலச்சரிவில் வீடுகள் இடிந்து விழுந்து 11பேர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர்.   

கொலம்பியாவின் மத்திய பகுதியில் Dosquebradas எனும் ஊர் அமைந்துள்ளது . இங்கு காபி பயிர் உற்பத்தி செய்யப்படும். இந்நிலையில் இங்கு திடீரென பெய்த கனமழையால்  நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் வீடுகள் இடிந்து விழுந்து 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் 35 பேர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து Otun  ஆற்றில் அதிக அளவில் தண்ணிர் பாய்வதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. அங்கு இருக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Categories

Tech |