ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீது நடந்த வெடிகுண்டு தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட 4 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் தற்போது ஆட்சி அதிகாரம் தலிபான்கள் கைவசம் சென்றுள்ளது. அந்நாட்டின் அதிபரான அஷ்ரப் கனி ஆப்கானை விட்டு வெளியேறினார். ஆப்கானிஸ்தானில் வசிக்கும் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களான உணவு, மருந்து போன்றவை கிடைக்காமல் ஐந்து வயதுக்கு உட்பட்ட சுமார் ஒரு கோடி குழந்தைகள் தவித்து வருகிறார்கள் என யூனிசெப் அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து அந்நாட்டை ஆட்சி புரியும் தலிபான்களின் மீது கடந்த சில வாரங்களாக குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றது. மேலும் காபூல் நகரில் பி.டி 13 பகுதியில் மிகவும் சக்தி வாய்ந்த வெடிகுண்டு நேற்று முன்தினம் வெடித்துள்ளது. இந்த சம்பவத்தில் 21 பேர் படுகாயமடைந்துள்ளனர். மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதார அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
இந்த சம்பவமானது அந்நகரில் தலிபான்கள் பொறுப்பேற்ற பிறகு நடந்த முதல் தாக்குதலாகும். மேலும் இந்த தாக்குதலுக்கு எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இதனை தொடர்ந்து தலிபான்கள் செல்லும் வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் ஒரு குழந்தை உயிரிழந்துள்ளது. மேலும் 2 பேர் காயமடைந்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.