பிரபல செல்போன் திருடனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் அடிக்கடி செல்போன்கள் திருடப்பட்டு வந்தது. இது தொடர்பாக எழும்பூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து கொள்ளையனை தேடி வந்தனர். அந்த தேடுதல் வேட்டையின் போது சாய்குமார் (24) என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
அவரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும், பல்வேறு பகுதிகளில் செல்போன் பறிப்பில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதனையடுத்து சாய்குமாரிடம் இருந்து 47 செல்போன்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் காவல்துறையினர் சாய்குமாரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.