Categories
சினிமா தமிழ் சினிமா

“தொடர் தோல்விகளை சந்தித்து வரும் விக்ரம்”…. ஆனால், மவுசு குறையலையே…. இதான் காரணமா….!!!!!

விக்ரம்-ரஞ்சித் இணையும் திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமையை வாங்க போட்டி நிலவிவருகின்றது.

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் விக்ரம். இவர் சேது திரைப்படத்தின் மூலம் பிரபலமானார். அதன் பின் அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து வெற்றி பாதைக்கு சென்றார். விக்ரம் சிறப்பாக நடித்தாலும் திரைக்கதை வலுவாக அமையாததால் அவரின் திரைப்படங்கள் தற்பொழுது தோல்வியை சந்தித்து வருகின்றது. அந்த வகையில் அண்மையில் மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியான கோப்ரா திரைப்படம் தோல்வியையே சந்தித்துள்ளது. இந்த நிலையில் இம்மாத இறுதியில் விக்ரம் நடிப்பில் மணிரத்தனம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. இத்திரைப்படம் விக்ரமை வெற்றி பாதைக்கு அழைத்துச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதையடுத்து விக்ரம் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க ஜிவி பிரகாஷ் இசையமைக்கின்றார். தற்பொழுது இத்திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமையை பிரபல ஓடிடி நிறுவனம் ஒன்று மிகப்பெரிய தொகைக்கு வாங்க முன்வந்திருப்பதாக சொல்லப்படுகின்றது. விக்ரமின் திரைப்படங்கள் தோல்வி சந்தித்தாலும் ரஞ்சித் இயக்கத்தில் அண்மையில் வெளியான சார்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கின்றது உள்ளிட்ட திரைப்படங்கள் நல்ல வரவேற்பு பெற்றது. ஆகையால் ரஞ்சித் படம் என்பதால்தான் டிஜிட்டல் உரிமையை மிகப்பெரிய தொகைக்கு வாங்க போட்டி நிலவுவதாக சொல்லப்படுகின்றது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |