Categories
கிரிக்கெட் விளையாட்டு

தொடர் தோல்வி…. நானே முழு பொறுப்பு…. ரோகித் சர்மா பேட்டி….!!!!

தோல்விக்கு நான்தான் முழு பொறுப்பு என மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் போட்டியில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகின்றது. நேற்று நடந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 18 ரன் வித்தியாசத்தில் லக்னோவிடம் தோற்றது.  இதையடுத்து மும்பை அணி தொடர்ந்து 6வது தோல்வியை தழுவியது. நடப்பு தொடரில் நடைபெற்ற 6 போட்டிகளில் இதுவரை ஒன்றில் கூட மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெறவில்லை.

இந்நிலையில் தோல்வி குறித்து கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளதாவது” மும்பை அணியின் தோல்விக்கு நானே பொறுப்பு ஏற்றுக்கொள்கிறேன். எங்கு தவறு நடந்தது என தெரியவில்லை. இனி வரும் போட்டிகளில் வெற்றிபெற கடுமையாக போராடுவோம்” என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |