Categories
உலக செய்திகள்

தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோருக்கு…. வார்னிங் கொடுத்த இலங்கை அரசு….!!!!

இலங்கை அரசு பொருளாதார நெருக்கடியால் திணறி வருகிறது. அந்நாட்டின் பொருளாதாரம் கொரோனாவுக்கு பின்னர் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. இதனால் இலங்கை மக்கள் அதிபர் கோத்தபயா ராஜபக்சே, பிரதமர் மகிந்தா ராஜபக்சே அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் பாதுகாப்புத்துறை அமைச்சகம், இலங்கையில் தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது இது தொடர்பில் வெளியான அறிக்கையில், இரு தரப்பினர் இலங்கையில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அமைதியான முறையில் ஒரு தரப்பினர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். ஆனால் பொது சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தும் வகையில் மற்றொரு தரப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தனியார் மற்றும் பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தும் வகையில் போராட்டங்களில் ஈடுபடுவோர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |