Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தொடர் மழையால் இடிந்து விழுந்த வீடு…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மூதாட்டி….!!!!

தொடர் மழையால் வீடு இடிந்து சேதமானதில் மூதாட்டி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

விருதுநகர் மாவட்டத்திலுள்ள பாளையம்பட்டி வடக்கு தெருவில் மங்கையன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மருதாயி(80) என்ற மனைவி உள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மங்கையன் இறந்துவிட்டதால் மருதாயி மட்டும் ஓட்டு வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பாளையம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்தது. இரவு நேரத்தில் மூதாட்டி தூங்கிக் கொண்டிருந்தபோது திடீரென பயங்கர சத்தம் கேட்டது. இதனால் திடுக்கிட்டு எழுந்து பார்த்த மூதாட்டி வீட்டின் ஒரு பகுதி முழுவதும் இடிந்து விழுந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வேறொரு அறையில் படுத்து இருந்ததால் அதிர்ஷ்டவசமாக மூதாட்டி உயிர் தப்பினார்.

Categories

Tech |