மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. ஈரோடு மாவட்டத்திலுள்ள கவுந்தப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் சத்தியமங்கலம்-ஈரோடு ரோட்டில் ராஜராஜேஸ்வரி புது மாரியம்மன் கோவில் எதிரே மாது என்பவர் குடியிருந்து வருகிறார்.
இவரது வீட்டு சுவர் தொடர் மழை காரணமாக இடிந்து விழுந்தது. அப்போது மாது மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் மற்றொரு அறையில் இருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதனையடுத்து பாதுகாப்பு கருதி மாதுவின் குடும்பத்தினர் உறவினர்கள் வீட்டில் தற்போது தங்கியுள்ளனர்.