கனமழைக்கு தாக்கு பிடிக்காமல் வீட்டு சுவர் இடிந்ததால் மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள நஞ்சைமகத்துவாழ்க்கை கிராமத்தில் ஓய்வு பெற்ற கிராம உதவியாளரான குமரவேலு என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மனைவி கலியம்மாளுடன்(60) கூரை வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தொடர் மழையின் காரணமாக எதிர்பாராதவிதமாக நேற்று வீட்டு சுவர் இடிந்து விழுந்ததால் மூதாட்டி இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டார்.
இதனையடுத்து வெளியே வர முடியாமல் சிரமப்பட்ட மூதாட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூதாட்டியின் உடலை மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.