Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

தொடர் மழையால் கடலில் சீற்றம்… மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல முடியாத நிலை…!!!!!

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு வங்க கடலை ஒட்டி அமைந்துள்ள பகுதியில் 300க்கும் மேற்பட்ட மீனவ குப்பங்களில் வசித்து வரும் மீனவர்கள் ஏரி மற்றும் வங்க கடலில் மீன் பிடி தொழில் செய்து வருகின்றார்கள். இந்த சூழலில் கடந்த மூன்று தினங்களுக்கும் மேலாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகின்ற நிலையில் கடற்காற்று வீசுவதால் பழவேற்காடு கடல் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது. அதனால் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லாமல் பழவேற்காடு ஏரியில் தங்களது மீன்பிடிப்புகளை பாதுகாப்பாக நிறுத்தி வைத்திருக்கின்றனர். மேலும் தொடர் கனமழையால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடி தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது.

Categories

Tech |