தொடர் மழையால் தக்காளி சாகுபடி குறைந்து விலை உயர்ந்துள்ளதாக உழவர் சந்தை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் கோட்டை பகுதியில்உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறி மற்றும் பழங்களை விற்பனைக்காக கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கம். அதன்படி நேற்று நடைபெற்ற உழவர் சந்தையில் சுமார் 17¼ டன் காய்கறிகளும், 4½ டன் பழங்களும் விற்பனைக்காக கொண்டுவந்து இருந்துள்ளனர். இதனையடுத்து தொடர்ந்து பெய்து வரும் பருவமழை காரணமாக தக்காளி விளைச்சல் குறைந்து விலையேற்றம் ஏற்பட்டதாக உழவர் சந்தை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் நேற்றைய நிலவரப்படி தக்காளி ஒரு கிலோவிற்கு 90 ரூபாய்க்கும், கத்தரிக்காய் 100 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் 45 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் 45 ரூபாய்க்கும், கேரட் 69 ரூபாய்க்கும், பீன்ஸ் 72 ரூபாய்க்கும், புடலங்காய் 70 ரூபாய்க்கும், இஞ்சி 40 ரூபாய்க்கும், வெண்டைக்காய் 60 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும் கடந்த வாரத்தை விட தக்காளி கிலோவிற்கு 30 ரூபாய் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.