குற்றாலம் அருவியில் தொடர் மழையால் வெள்ளம் ஆர்ப்பரித்துக் கொட்டுவதன் காரணமாக சுற்றுலாப் பயணிகள் 2வது நாளாக குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில் மாநிலம் முழுவதும் மழை வெளுத்து வாங்கி ஆங்காங்கே வெள்ளம் ஏற்பட்டுள்ளது .இதைத் தொடர்ந்து தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் பெய்யும் மழை நீர் வெள்ளம் போல் ஆர்ப்பரித்துக் கொட்டும் நிலையில் குற்றாலத்தில் உள்ள மெயினருவி, ஐந்தருவி, பழைய அருவிகளில் சுற்றுலாவிற்கு வரும் பயணிகள் 2-வது நாளாக குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அருவியில் குளிப்பதற்கு பல இடங்களிலிருந்து ஆவலுடன் வரும் ஐயப்ப பக்தர்களும், சுற்றுலாப் பயணிகளும் ஏமாற்றத்துடன் செல்கின்றனர் .