காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் அளவு 30,000 கன அடியாக உயர்ந்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. மேலும் கிருஷ்ணகிரி, ஒசூர், பஞ்சப்பள்ளி, தேன்கனிக்கோட்டை போன்ற பகுதிகளை சுற்றியுள்ள மலை மற்றும் வனப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அந்த மழை நீரானது காவிரி ஆற்றில் கலந்து விடுகிறது.
அதனால் நேற்று தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் வினாடிக்கு 10,000 கன அடியாக இருந்த நீர்வரத்து 30,000 கனஅடியாக தற்போது உயர்ந்துள்ளது. இதனால் ஒகேனக்கல்லில் உள்ள ஐந்தருவி, மெயின் அருவி, சீனி பால் போன்ற அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. வெள்ளப்பெருக்கு காரணமாக அந்தப் பகுதிகளில் சுற்றுலா பயணிகள் மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே விதிக்கப்பட்ட தடையை தொடர்ந்து நீட்டித்துள்ளது.