Categories
மாநில செய்திகள்

தொடர் மழையால்… 300 தொழில் நிறுவனங்களில் வெள்ளம்…. அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறிய தகவல்….!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதன்படி சென்னையில் கடந்த வாரம் பெய்த கனமழையால் அம்பத்தூரில் தொழிற்பேட்டையில் உள்ள தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி 300 தொழில் நிறுவனங்கள் மற்றும் 30 சாலைகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதுகுறித்து ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல் ஆகியோர் அனைத்து உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் மற்றும் தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம் சிட்கோ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

அதனைத் தொடர்ந்து மழை நீர் வடிகால்வாய் செல்லும் பகுதிகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேரில் சென்று பார்வையிட்டார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், அம்பத்தூரில் இருந்து கோட்டூர் ஏரிக்கு செல்லக்கூடிய நீர் கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டு தொழிற்சாலைகள் கட்டப்பட்டு வருகின்றன. எனவே வடக்கு சிட்கோ பகுதியில் 300 தொழிற் சாலைகளில் மழை நீர் புகுந்துள்ளது. அதையடுத்து கடந்த இரு தினங்களாக மழை பெய்யாத காரணத்தினால் மழைநீர் வடிந்து இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. இதனால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று அவர் கூறினார். மேலும் அம்பத்தூரில் இருந்து கோட்டூர் ஏரிக்கு செல்லும் நீர் வழிப்பாதையை சரி செய்ய தமிழக அரசு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியாக கூறியுள்ளார்.

 

Categories

Tech |