தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பஞ்சபள்ளி சின்னாறு அணை தொடர் மலை காரணமாக நேற்று நிரம்பியது. இதனால் வினாடிக்கு 4200 கன அடி உபரி நீர் அணையிலிருந்து திறந்து விடப்பட்டதால் சின்னாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து மாரண்டஹள்ளி வழியாக செல்லும் சனத்குமார் நதியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் நதிகளை ஒட்டியுள்ள கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் துணி துவைக்கவோ, ஆறுகளில் குளிக்கவோ, கால்நடைகளை கரையோரப் பகுதிகளுக்கு மேய்ச்சலுக்கு அனுப்பவோ கூடாது என பொதுப்பணித்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
Categories