Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தொடர் மழை…. 5 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் பாதிப்பு…. அதிகாரிகளின் கணக்கெடுப்பு…!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் 112 வீடுகள் இடிந்து சேதமானது. இந்நிலையில் இடிபாடுகளுக்குள் சிக்கி காயமடைந்த மூன்று பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து 2 கன்று குட்டிகள், 2 பசு மாடுகள, 5 ஆடுகள் என 9 கால்நடைகள் பலியாகி, 16 மின்கம்பங்கள் சேதமானது. நேற்று முன்தினம் நடைபெற்ற கணக்கெடுப்பு படி 5 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகும் நிலையில் இருக்கிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |