Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த 3பேர் கைது …!!

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த 3பேரை காவல்துறையினர் கைது செய்தனர் .

 

ஓட்டப்பிடாரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இரு சக்கர வாகனங்களில் தனியாக வரும் பெண்களை குறிவைத்து ஒரு கும்பல் வழிப்பறி செய்து வந்தனர் .இது குறித்து விசாரணை செய்து வந்த போலீசார் வழிப்பறியில் ஈடுபட்ட முத்தரையரத்தை சேர்ந்த தினேஷ்குமார் ,மதுரை மாவட்டம் மேலுரைச்சேர்ந்த கருப்பசாமி ,நெல்லை திசையன்விளையை சேர்ந்த துரை ஆகியோரை கைது செய்தனர் .அவர்களிடம் இருந்த 25சவரன் நகைகளை பறிமுதல் செய்த காவல்துறையினர் முக்கிய நபராக இருக்கும் ஒருவரை தேடி வருகின்றனர் .

Categories

Tech |