கோவை குற்றாலம் அருவிக்கு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் பெய்த கனமழை காரணமாக கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தடை விதித்தனர். பின்னர் கடந்த மாதம் 27-ஆம் தேதி முதல் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் தொடர் விடுமுறையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு சென்று அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.
Categories