நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். விடுமுறை தினத்தை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா ஆகிய இடங்களுக்கு சென்று புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர். மேலும் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்கின்றனர். ஏராளமான சுற்றுலா பயணிகளின் வருகையால் ஊட்டியின் பல்வேறு முக்கிய இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நிற்கிறது. இந்நிலையில் தங்கும் விடுதி மற்றும் ஹோட்டல்களில் கட்டணம் அதிகமாக இருப்பதாக சுற்றுலா பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனையடுத்து சுமார் 1 லட்சம் சுற்றுலா பயணிகள் இந்த விடுமுறை தினத்தில் ஊட்டிக்கு வந்து சென்றதாக சுற்றுலாத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Categories