கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறைக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் காலாண்டு தேர்வு முடிந்ததால் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் வால்பாறைக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் நகராட்சி தாவரவியல் பூங்கா மற்றும் குரங்கு நீர்வீழ்ச்சிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்று அருவியில் குளித்து மகிழ்ந்து, இயற்கை அழகை கண்டு ரசிக்கின்றனர். இனி வரும் நாட்களில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Categories