விடுமுறை தினத்தை முன்னிட்டு ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டிக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வர். இந்நிலையில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளின் பார்வைக்காக பத்தாயிரம் பூந்தொட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. தொடர் விடுமுறை காரணமாக சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா முன்பு குவிந்துவிட்டனர்.
இவர்கள் வரிசையில் காத்திருந்து நுழைவுச் சீட்டை வாங்கி பூங்காவிற்கு சென்றனர். இதனை தொடர்ந்து ஊட்டி-கோத்தகிரி சாலை உள்ளிட்ட முக்கியச் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்பட்டதால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டுள்ளனர்.