சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் அருகே பிச்சாவரம் சுற்றுலா மையம் அமைந்துள்ளது. இங்கு விடுமுறையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். இந்நிலையில் சனி, ஞாயிறு, சுதந்திர தினத்தை முன்னிட்டு 3 நாட்கள் தொடர் விடுமுறை இருப்பதால் வழக்கத்தை விட அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருகை புரிந்துள்ளனர்.
இவர்கள் படகு சவாரி செய்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்து டிக்கெட் வாங்கி படகில் சென்று மகிழ்ந்தனர். இதைத்தொடர்ந்து கடல் கன்னி சிலைகள் மற்றும் சுரபுண்ணை காடுகளுக்கு அருகே நின்று செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர். மேலும் வழக்கத்தை விட அதிக அளவில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் சுற்றுலா மையம் மிகவும் பரபரப்பாக காணப்பட்டது.