Categories
மாநில செய்திகள்

தொடர் விடுமுறை முடிந்து சென்னை திரும்ப… 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்… போக்குவரத்து கழகம் உத்தரவு…!!!!!

ஆங்கில புத்தாண்டு மற்றும் அரையாண்டு தொடர் விடுமுறை முடிந்து பயணிகள் அனைவரும் தங்கள் சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்புவதற்கு வசதியாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. அந்த வகையில் வருகிற 1.1.2023 அன்று வரை நாகர்கோவில், மதுரை, கோயம்புத்தூர், திருநெல்வேலி, ஈரோடு, சேலம் மற்றும் திருச்சி போன்ற முக்கிய நகரங்களில் இருந்து சென்னைக்கு தினசரி இயங்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 600 பேருந்துகள் இயக்கப்படுகிறது.

இது மட்டுமல்லாமல் புதுச்சேரி, ஈரோடு, கோயம்புத்தூர் போன்ற முக்கிய நகரங்களுக்கு தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதல் தேவைக்கு தகுந்தார் போல் சிறப்பு பேருந்துகள் இயக்குவதற்கு அனைத்து போக்குவரத்து கழகங்களும் திட்டமிட்டுள்ளது. இதனையடுத்து அனைத்து முக்கிய பேருந்து நிலையங்களிலும் போதுமான அதிகாரிகள் நியமிக்கப்பட்டு அவர்கள் பொதுமக்களின் பயணங்களுக்கு உரிய ஏற்பாடுகள் செய்ய தகுந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் முன்பதிவு செய்வதற்காக வழிவகை செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில்www.tnstc.in. மற்றும் tnstc official app போன்ற இணையதளங்களின் மூலமாக பயணிகள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

Categories

Tech |