Categories
லைப் ஸ்டைல்

தொட்டவுடன் சுருங்குவது போல…. சாப்பிட்டதுமே சர்க்கரை நோயை விரட்டியடிக்கும்…!!!

தொட்டாற்சிணுங்கி என்னென்ன மருத்துவ குணங்களுக்கு பயன்படுகிறது என்பதை இங்கே பார்க்கலாம்.

தொட்டாற்சிணுங்கி மீது தொட்டாலோ அதன் மீது ஏதேனும் பட்டாலோ அது உடன் தன் சீறிலைகளை மூடிக்கொள்ளும், அதாவது தன் இலைகளைச் சுருக்கிக்கொள்ளும். தரையோடு படரும் செடிவகையான இதில், சிறு சிறு முட்கள் நிறைந்திருக்கும். சிறு பட்டையான காய்களைக் கொண்டது. இளஞ்சிவப்பு நிறத்தில் காணப்படும் இதன் மலர்கள், சிறிய பந்துபோல் காட்சியளிக்கும்.

சர்க்கரைக்கு நோய்க்கு:

தொட்டாற்சிணுங்கி வேரை நன்கு அலசி வெயிலில் உலர்த்தி இடித்துச் சூரணமாக்கிக்கொள்ள வேண்டும். இதேபோல், தொட்டாற்சிணுங்கி இலைகளையும் இடித்துச் சூரணமாக்கி இரண்டையும் சம அளவுக்கு கலந்து கொள்ளவும்.இந்தக் கலவையை ஒரு ஸ்பூன் அளவு எடுத்துத் தண்ணீரில் கலந்து தினமும் மூன்று வேளை உட்கொண்டால், சர்க்கரை நோயில் இருந்து மீள முடியும். இதே சூரணக் கலவையைத் தினமும் மூன்று வேளை ஒரு ஸ்பூன் அளவு எடுத்து, காய்ச்சியப் பசும்பாலுடன் கலந்து சாப்பிட்டுவந்தால், மூலம், பவுத்திரம் போன்ற நோய்களும் குணமாகும்.

சிறுநீர் சிக்கல்:

சுத்தம் செய்த தொட்டாற்சிணுங்கி வேரை ஒரு கைப்பிடி அளவு எடுத்து நன்றாக நசுக்கிக்கொள்ள வேண்டும். பின்னர் இந்த வேரை மண் சட்டியில் இட்டு மூன்று பங்கு தண்ணீர் சேர்த்து ஒரு பங்கு ஆகும் அளவுக்கு சுண்டக் காய்ச்சி வடிகட்ட வேண்டும். வடிகட்டிய இந்த நீரை கால் அவுன்ஸ் அல்லது அரை அவுன்ஸ் வரை நாள் ஒன்றுக்கு மூன்று வேளை சாப்பிட்டு வந்தால், சிறுநீரகம் சம்பந்தமான நீர் அடைப்பு, கல் அடைப்பு ஆகியவை குணப்படும்.

தளர்ச்சி நீங்க:

தொட்டாற்சிணுங்கி வேரை சுத்தம் செய்து 40 கிராம் அளவு எடுத்து, மண் சட்டியில் இட்டு மூன்று பங்கு தண்ணீர் சேர்க்க வேண்டும். நீர் ஒரு பங்கு ஆகும் வரையிலும் நன்றாகச் சுண்டக் காய்ச்சிக் கஷாயமாக்க வேண்டும். சூடு தணிந்த பின் கஷாயத்தை வடிகட்டி, அரை அவுன்ஸ் வீதம் தினம் இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால், தளர்ச்சி நீங்கி உடல் தேறுவதோடு சுக்கில (விந்தணு) நஷ்டமும் நீங்கும்.

புண்கள்,வெட்டுக்காயங்கள் குணமாக:

இந்த இலையின் சாறு புண்களை குணப்படுத்தும், வெட்டுக் காயங்களை குணப்படுத்த முழுச் செடியையும் அரைத்து சாறு எடுத்து தினமும் இரண்டு தடவை தடவி வந்தால் பலன் கிடைக்கும்.

மூட்டு வீக்கம்:

கைகால்களில் ஏற்படும் மூட்டு வீக்கத்தை குணப்படுத்த தொட்டாற்சினிங்கி இலையை மையாக அரைத்து பூசலாம். அலர்ஜி, தோல் தடிப்புகளும் இதற்கு கட்டுப்படும்.

Categories

Tech |