பெண்ணை தாக்கிய குற்றத்திற்காக தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அஞ்செட்டி பைல்காடு மலை கிராமத்தில் பசப்பா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாதம்மாள்(38) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மாதமாளுக்கும் அதே பகுதியில் வசிக்கும் கூலித் தொழிலாளியான முருகன்(40) என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இந்த சம்பவம் நடைபெற்ற அன்று மாதம்மாள் வளர்த்து வரும் மாடு முருகன் வீட்டு தண்ணீர் தொட்டியில் தண்ணீர் குடித்தது.
இதுதொடர்பாக ஏற்பட்ட தகராறில் முருகன் பெண்ணை தாக்கியுள்ளார். இதனால் காயமடைந்த மாதம்மாள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.