Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தொட்டிலில் தூங்கிய குழந்தை இறப்பு…. பிரேத பரிசோதனையில் தெரிந்த உண்மை…. கதறும் பெற்றோர்…!!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளிரவெளி பகுதியில் மதிவாணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு கோகுல ஸ்ரீ என்ற 3 மாத பெண் குழந்தை இருந்துள்ளது. தற்போது முத்துலட்சுமி ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபி பெரியகுறவன் பாளையத்தில் இருக்கும் தாய் வீட்டில் தங்கி இருக்கிறார்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு முத்துலட்சுமி தனது குழந்தைக்கு பால் கொடுத்துவிட்டு தொட்டிலில் தூங்க வைத்துள்ளார். சிறிது நேரம் கழித்து பார்த்த போது குழந்தை அசைவு இல்லாமல் இருந்ததால் அதிர்ச்சியடைந்த முத்துலட்சுமி உடனடியாக தனது குழந்தையை தூக்கி கொண்டு கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் குழந்தையின் உடலை பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் பிரேத பரிசோதனை அறிக்கையில் தாய்ப்பால் குடித்ததால் புரையேறி குழந்தை இறந்ததாக கூறப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனைக்கு பிறகு குழந்தையின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |