Categories
அரசியல் மாநில செய்திகள்

தொட்டு தான் பாருங்களேன்…. வட்டியும், முதலுமா திருப்பி கொடுக்க ரெடி…. அண்ணாமலை எச்சரிக்கை…!!!

கோவையில் இஸ்கான் கோவிலில் நடைபெற்ற அமைதிப் போராட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், வங்காள தேசத்தில் இந்துக்கள் சிறுபான்மையாக இருக்கும் நிலையில் அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு, அவர்களின் சொத்துக்களும் சூறையாடப்படுகிறது. தனியாரிடமிருந்து மின்சாரத்தை வாங்குவதற்கு தான் தமிழக மின்சார வாரியம் உள்ளது. ஆனால் தமிழக மக்களுக்கு மின்சாரம் கொடுப்பதற்காக அல்ல மின்சாரத் துறை அமைச்சருக்கு கமிஷன் வருவதற்காகத்தான் எனவும் கூறினார்.

இதே போல தான் இந்தியாவில் நிலக்கரி தட்டுப்பாடும் கிடையாது. தடுப்பூசி தட்டுப்பாடும் கிடையாது என்று கூறிய அவர், தன்னுடைய குடும்பம் நன்றாக இருப்பதற்காக நேர்மையான அதிகாரியை ஊழல்வாதிகள் ஆக மாற்றுகிறார்கள். பிரதமர் மோடி ஊழல் செய்பவர்கள் எங்கு இருந்தாலும் அவர்களை தூக்கி கொண்டு வருவோம் என்று சொல்லியுள்ளது தமிழக அமைச்சர்களுக்கும் பொருந்தும். சேகர் பாபு பாஜகவை எப்படி கையாள வேண்டும் என்று தெரியும் கூறியுள்ளார். தொட்டு பார்க்கட்டும். 17 மாநிலங்களில் ஆட்சி செய்கிறோம். மோடி டெல்லியில் உள்ளார். தொடுவார்கள் என்று தான் காத்திருக்கிறோம். தொட்டுப் பார்கட்டும். வட்டியும், முதலுமாக அவர்களுக்கு திருப்பிக் கொடுப்போம் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |