Categories
அரசியல் மாநில செய்திகள்

தொண்டனாக இருப்பது பெருமை…. டுவிட் போட்ட அண்ணாமலை…. பதவியை ராஜினாமா செய்கிறாரா…??

தமிழக பாஜக மாநில பொதுச்செயலாளராக இருந்தவர் கே.டி ராகவன். இவர் பாஜகவில் உள்ள பெண்களிடம் தவறாக நடந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வந்த நிலையில் பாஜகவை சேர்ந்த மதன் நடத்திய ஸ்டிங் ஆபரேஷன் மூலம் கே.டி ராகவனின் சர்ச்சைக்குரிய வீடியோ  வெளியாகியது. இதனையடுத்து தன்னுடைய கே.டி ராகவன் பதவியை ராஜினாமா செய்தார். மேலும் இது குறித்த சட்டரீதியாக எதிர்கொள்ள போவதாகவும் தெரிவித்தார்.

இதற்கிடையில் மதன் மற்றும் அவரது நண்பரை பாஜக கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து அக்கட்சி நீக்கியது. கே.டி ராகவனின் இந்த வீடியோ வெளியானதையடுத்து காங்கிரஸ் கட்சியினர் உட்பட பலரும் தங்களுடைய கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில்  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், மூன்று விஷயங்கள் எனக்கு வழிகாட்டும் என்னை தொடர்ந்து வழிநடத்தும். பாஜாகாவின் தொண்டன் என்கிற பெருமை என்னை இயங்க வைக்கிறது. ஒவ்வொரு முறையும் தான் முதலில் தேசம். ஜெய்ஹிந்த் என்று பதிவிட்டிருந்தார். எளிய தொண்டர் என்று அவர் பதிவிட்டுள்ளதால் பாஜக மாநிலத் தலைவர் பதவியை அண்ணாமலை ராஜினாமா செய்யப் போகிறாரரா? என்று மக்களிடையே கேள்வி எழுந்துள்ளது.

Categories

Tech |