Categories
அரசியல் மாநில செய்திகள்

தொண்டர்களே! என்னை யாரும் சந்திக்க வராதீங்க…. தேமுதிக தலைவர் விஜகாந்த் கண்டிஷன்…!!!

திமுக தலைவர் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாள் வரும் 25ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இந்நிலையில் அவர் மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல இருப்பதால் தொண்டர்கள் யாரும் தனது பிறந்தநாள் அன்று தன்னை நேரில் சந்திக்க வரவேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “2005ஆம் வருடம் கழகம் தொடங்கப்பட்ட பிறகு 2006ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் என்னுடைய பிறந்த நாளை வறுமை வறுமை ஒழிப்பு தினமாக தான் கடைபிடித்து வருகிறோம்.

“இயன்றதை செய்வோம் இல்லாதவருக்கு” என்ற கொள்கை முழக்கத்தோடு தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் மக்களுக்காக உதவிகளை செய்து வருகிறோம். ஆனால் தற்போதுதான் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் பெரும் கூட்டம் கூடினால் தொற்று மேலும் பரவும் அபாயம் உள்ளது. எனவே அனைவருடைய நலன் கருதி என்னுடைய பிறந்தநாள் அன்று தொண்டர்கள் யாரும் என்னை சந்திக்க வரவேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |