மக்கள் நீதி மைய தலைவர் கமலஹாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, “கடைசி மனிதனுக்கும் அதிகாரம்’ என்னும் காந்தியின் கனவே நம் கனவு. கிராம சபைகளை பொருத்தமட்டில் இதுவே நம்முடைய கனவாக உள்ளது. மக்கள் நீதி மையமானது தமிழகத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் கிராம சபைகளின் முக்கியத்துவத்தை எடுத்துச் சென்றுள்ளது. இது மிகவும் பெருமை வாய்ந்த விஷயமாகும்.
ஆளும் கட்சிகளும் இதற்கு முன் ஆண்ட கட்சிகளும் கிராம சபைக்கு பயந்து இதுவரை நடத்தாமல் இருந்துள்ளது. இதற்கு கொரனா மிகவும் ஏதுவான காரணமாக அமைந்திருந்தது. இது மக்கள் நீதி மையத்தில் முதல் உள்ளாட்சி தேர்தலால், நான் மற்றும் கட்சியின் மற்ற மூத்த தலைவர்களும் தேர்தல் பணிகளில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம். மேலும் கிராமசபை கூட்டங்களில் மக்கள் நீதி மையத்தினர் தேர்தல் நடக்காத பகுதிகளில் கூட கலந்து கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார்.