தமிழக அரசியலில் தற்போது சசிகலா தொண்டர்களுடன் பேசும் ஆடியோக்கள் வெளியாகி அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. அமமுக மற்றும் அதிமுக தொண்டர்களுடன் பேசும் ஆடியோவானது எப்படியாவது லீக் ஆகி விடுகிறது. இதுவரை அவர் தொண்டர்களுடன் பேசிய ஆடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பி வருகின்றன. இதையடுத்து சசிகலாவிடம் பேசியவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டும் வருகின்றனர்.
சசிகலாவின் பேச்சுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் சசிகலா தொண்டர் ஒருவருடன் நான் அம்மாவுடன் மட்டுமல்ல தலைவர் எம்ஜிஆருடன் சேர்ந்தும் நான் பயணித்திருக்கிறேன். எம்ஜிஆருக்கே ஆலோசனை கூறியிருக்கிறேன் என்று பேசி விமர்சனத்திற்கு ஆளானார்.
இதனைத்தொடர்ந்து ஊரடங்கு முடிந்தவுடன் ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று விட்டு தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக அறிவித்தார். இந்நிலையில் அதிமுக தொண்டர்கள் யாரும் சசிகலாவுக்கு ஆதரவாக செயல்படக்கூடாது என்று இபிஎஸ்-ஓபிஎஸ் அதிரடி உத்தரவிட்டுள்ளனர்.