மராட்டிய மாநிலத்தில் உள்ள ராஜ்வாடி என்ற கிராமத்தை சேர்ந்த கரண் ஹென்ஹடி (28) மற்றும் ஷிடல் (22) என்ற தம்பதிக்கு 18 மாத பெண் குழந்தை ஒன்று உள்ளது. என் நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று குழந்தைக்கு உணவு கொடுக்கும் போது அந்த உணவு குழந்தையின் தொண்டையில் சிக்கிக்கொண்டது. உடனே குழந்தையை அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிர் இழந்துள்ளது. இதை எடுத்து தம்பதியினர் இருவரும் மிகுந்த மனவேதனையில் இருந்துள்ளனர்.
அதனால் அவர்கள் வீட்டிற்கு அருகே கோவிலில் உள்ள மரத்தில் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தம்பதியினர் உடலை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதை எடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் கோவில் அருகே இருந்து ஒரு கடிதம் கிடைத்துள்ளது. அந்த கடிதத்தில், அவளிடமே நாங்கள் செல்கிறோம் என்று எழுதப்பட்டிருந்தது இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.