தொண்டையில் தேங்காய் துண்டு சிக்கி ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள பொன்னேரி பகுதியில் வசந்த் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 3 வயதுடைய சஞ்சீஸ்வரன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் வசந்தின் மனைவி சமைப்பதற்காக தேங்காய் துண்டுகளை நறுக்கி வைத்துள்ளார். அப்போது வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த சஞ்சீஸ்வரன் தேங்காய் துண்டுகளை எடுத்து சாப்பிட்ட போது சில துண்டுகள் குழந்தையின் தொண்டையில் சிக்கிக் கொண்டது. இதனால் மூச்சு விட முடியாமல் சஞ்சீஸ்வரன் மயங்கி விழுந்துவிட்டார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த வசந்த் தனது குழந்தையை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சஞ்சீஸ்வரன் பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.